வாதங்கள் விபரம்

 செந்தில் பாலாஜி வழக்கு வாதங்கள் விபரம்:-

செந்தில் பாலாஜி பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் நிலையில் அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ’என் கணவரை சட்டவிரோதமாக கைது செய்து உள்ளனர். 

அவரின் கைதுக்கான காரணத்தை சொல்லவில்லை’ என்று அவரது ஆட்கொணர்வு மனுவில் மேகலா கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் இருந்து வழக்கறிஞரும் திமுக எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ வாதங்களை முன் வைத்தார்.

என்.ஆர்.இளங்கோ  வாதங்கள்:-

செந்தில் பாலாஜியை காவிரி மருத்துவமனைக்கு மாற்றவும், நீதிமன்ற காவலில் நீடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்தது. 

இது தெரிந்தே, அவரை காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.

இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவை மீறி காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை, ஏற்கெனவே நீதிமன்ற காவல் 15 நாட்கள் தரப்பட்ட பின்னர் எப்படி அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியும்.

நீதிமன்ற காவல் 15 நாட்கள் கொடுக்கப்பட்ட பின்னர் அமலாக்கத்துறை காவலில் எடுக்க கூடாது. சுனாமியே வந்தாலும் அது நடக்காது, கொரோனாவே மீண்டும் வந்தாலும் இப்படி நடக்க கூடாது. அப்படி இருக்க அமலாக்கத்துறை எப்படி கஸ்டடி எடுக்க முடியும் என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார்.

செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பின் வாதங்களை கேட்டு பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

வழக்கு விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறுகையில், 

"செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு நிலைக்கத்தக்கதா என்ற விவாதம் ஏற்பட்டது. 

அமலாக்கத்துறை இந்த மனு நிலைக்கத்தக்கது அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்தது.

இதுவரை உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளில் ஆட்கொணர்வு மனு விசாரிக்கும் தேதியில் ஏதாவது நீதிமன்றத்தால் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தால் அந்த உத்தரவு சட்டவிரோதமாகவோ அல்லது ஒரு இயந்திரத் தனமாகவோ வழங்கப்பட்டு இருந்தால் ஆட்கொணர்வு மனு நிலைக்கத் தக்கது என்ற தீர்ப்புகளை முன் வைத்து நாங்கள் வாதாடினோம்.

இரண்டாவதாக செந்தில் பாலாஜியின் மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் போலீஸ் காவலில் கழித்துக் கொள்ள வேண்டுமா, இல்லையா என்ற வாதத்தில் உச்சநீதிமன்ற முன் தீர்ப்புகளை முன் காட்டி எந்த சூழலிலும் 15 நாட்களை காட்டி போலீஸ் காவல் தரக்கூடாது என்ற வாதத்தை முன் வைத்தோம்.

அதற்கும் மேலாக, இந்தியாவில் உள்ள இந்திய சுங்க சட்டம், வருமானவரி சட்டம், ஜிஎஸ்டி சட்டம் ஆகிய வழக்குகளை விசாரிக்க கூடிய அதிகாரிகளுக்கு போலீஸ் அதிகாரி என்ற அதிகாரத்தை அந்தந்த சட்டமே கொடுத்துள்ளது. ஆனால் பாராளுமன்றம் பணமோசடி தடுப்புச் சட்டத்தை உருவாக்கும் போதுஅமலாக்கத்துறை அதிகாரிகளை போலீஸ் அதிகாரிகள் என்று வரையறை செய்யவில்லை. 

அந்த காரணத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பண மோசடி தடுப்பு சட்ட வழக்குகளை புலன் விசாரணை செய்யும் போது அவர்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரமே இல்லை என்ற வாதத்தை எடுத்து வைத்துள்ளோம்."என்றார்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?