எரிகிறது
உங்கள் உடல் தரும் பிரமிப்பு.
1. உங்கள் கண்கள் நிமிடத்துக்கு 20 முறை சிமிட்டுமாம். இது ஓர் ஆண்டுக்கு ஒரு கோடி முறைக்கு மேலே!
2. உங்கள் வாழ்நாள் முழுவதும் காதுகள் வளர்ந்து கொண்டே இருக்கும்!3. காதுக்குள் உருவாகும் பிசுக்கு, அழுக்கு ஒரு வகை இனிப்பாகுமாம்!
4. உங்கள் நாக்கில் 8,000 சுவை அரும்புகள் உள்ளன. ஒவ்வோர் அரும்பிலும் 100 செல்கள் இருக்கும். அவைதான் சுவையைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன!
5. உங்கள் வாழ்நாளில் 40 ஆயிரம் லிட்டர் எச்சில் அல்லது உமிழ்நீரை நீங்கள் உற்பத்தி செய்கின்றனர். இதை வேடிக்கையாகச் சொல்ல வேண்டுமென்றால் அந்த உமிழ்நீரைக் கொண்டு 500 பாத்டப்களை நிரப்பிவிடலாம்- உவ்வாக்!
6. தினசரி உங்கள் மூக்கில் இருந்து ஒரு கப் சளியாவது வெளியாகிறது!
7. நீங்கள் தூங்கிமுடித்து காலையில் எழுந்திருக்கும்போது 1 செ.மீ. உயரமாகி இருப்பீர்கள். தூங்கும்போது நார்மலாகிவிடுவீர்கள். இதற்குக் காரணம் பகல்வேளையில் உங்கள் எலும்புகளுக்கு இடையிலுள்ள ஜவ்வுகள் விரிந்து பின்னர் சுருங்குவதால் இவ்வாறு நேரிடுகிறது.
8. நீங்கள் தினமும் 12 மணிநேரம் நடந்தால் உலகத்தைச் சுற்றிவர சராசரியாக ஒரு மணிதருக்கு 690 நாட்கள் ஆகுமாம்!
9. உங்கள் உடலில் சோர்வே அடையாத ஒரு உறுப்பு இதயம்!
10. ஒவ்வொரு மாதமும் உங்களது உடல் தோல் உரிந்து புதிதாக உருவாகிவிடும். இதை வேறுவழியில் சொல்வதென்றால் உங்கள் வாழ்நாளில் உங்களுக்கு 1000 புதிய தோல்கள் உருவாகியிருக்கும்.
--------------------------------------------------தொடர்வோம்
மணிப்பூர் எரிகிறது
மணிப்பூரில் மீட்டி இனத்தவருக்கும், குக்கி உள்ளிட்ட பழங்குடி இனத்தவருக்குமிடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் வெடித்தது. தங்களைப் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டுமென்கிற மீட்டி இனத்தவரின் கோரிக்கைக்கு, பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.
அதில், 100 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், ‘அரசு சொல்வதைவிடப் பல மடங்கு பேர் இறந்திருக்கிறார்கள்’ என்கிறது சமூக ஆர்வலர்கள் குழு. இன மோதல்களால் பற்றியெரியும் மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்று வந்த பிறகும்கூட, அங்கு தீவைப்புச் சம்பவங்களும், துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறைகளும் நின்றபாடில்லை.
இந்த நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தின் லாம்ஃபெல் பகுதியில் வசிக்கும் ஒரே பெண் அமைச்சரும்,பழங்குடி இனத்தவருமான தொழில்துறை அமைச்சர் நெம்சா கிப்ஜெனின் (Nemcha Kipgen) அதிகாரபூர்வ இல்லத்துக்குத் தீவைக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சம்பவத்தின்போது அமைச்சர் நெம்சா கிப்ஜென் வீட்டில் இல்லை என்று அதிகாரிகள் தரப்பு விளக்கமளித்திருக்கிறது.
உயர் அதிகாரிகள் தலைமையிலான பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பழங்குடியினர் அதிகமுள்ள காங்போக்பி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் நெம்சா கிப்ஜென், முதல்வர் என்.பிரேன் சிங் தலைமையிலான 12 உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது
-------------------------------------------