மனதை உடைத்தவர்கள்

 மணிப்பூரில் பிரதமர் மோடிக்கு எதிராக மைத்தி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அச்சமயம்மன்கிபாத் நிகழ்ச்சியில் மோடி பேசிக்கொண்டு இருந்தபோது, அந்த ரேடியோவை சுக்குநூறாக உடைத்து எறிந்தனர்.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் கலவரத்தில் இதுவரை 120 பேர் உயிரிழந்த நிலையல், 4,000 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராமிய இசையுடன் தொண்டர்கள் உற்சாகம்.

• சென்னையில் பலத்த காற்றுடன் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. காற்றின் காரணமாக மயிலாப்பூரில் வேருடன் சாலையில் மரங்கள் சாய்ந்தது.

குடியாத்தம் அருகே வானில் இருந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. வெப்பநிலையை ஆய்வு செய்யும் ஜிபிஎஸ் கருவி என விசாரணையில் தெரியவந்துள்ளது.

• தொடர்ந்து பெய்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியது. மெரினா சாலையில் இரும்பு தடுப்புகள் தூக்கி வீசப்பட்டது.

கனமழை காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

• கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானலில் மழைக்கு குடை பிடித்துக்கொண்டு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

தஞ்சாவூரில் போதையில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் சாலையில் தகராறு செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்த 3 பா.ஜ.க வினர் கைது.

புழல் ஏரியில் நீர்இருப்பு 2178 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 200 கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 428 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீர் தேவைக்காக 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 425 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 21 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.


மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாலும்  பிளஸ் 2 துணைத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

-------------------------------------

உங்கள் உடல்

 பிரமிப்புகள்.

21. நீங்கள் தும்மல் போடும்போது அம்மா, அப்பா அல்லது பிளஸ் யூ என்று சொல்லக்கூடும். ஏனென்றால் அப்படித் தும்மும்போது உங்களது இதயம் ஒரு மில்லி செகண்ட் நேரத்துக்கு நின்று மீண்டும் துடிக்கும். பயப்பட ஒன்றுமில்லை.

22. நீங்கள் உரக்க தும்மினால் உங்களது விலா எலும்பு முறியக்கூடும். அதேபோல தும்மலை அடக்க முயற்சி செய்தீர்கள் என்றால் கழுத்தையும் தலையையும் இணைக்கும் ரத்த நாளம் சிதைந்து மரணம் நிகழக்கூடும். தும்மலினால் ஏற்படும் அதிர்வினால் செவிப்பறை சிதையலாம். மூளை, கண்களின் நரம்புகள் சேதமடையலாம். தொண்டையில் புண் ஏற்படும்.

23. இயர்போன்களை பயன்படுத்தினால் உங்கள் காதுகளில் ஒரு மணிநேரத்தில் 700 மடங்கு பாக்டீரியாக்கள் உருவாகுமாம். இதைத் தாங்கிக் கொள்ளமுடியாததால்தான் காதுகளில் வலி உண்டாகிறது. இது நீண்டநாள் காதுகேட்கும் திறனை பாதித்துவிடக்கூடும்.

24. உங்கள் வாயில் நாளொன்றுக்கு சுமார் ஒரு லிட்டர் எச்சில் ஊறுமாம்!

25. நீங்கள் விழித்திருக்கும்போது உங்கள் மூளை செயல்படுவதைவிட நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது மூளை அதிவேகமாகச் செயல்படுமாம்.

26. உங்கள் உடலில் உள்ள ரத்தக்குழாய்களை இணைத்து பரவ வைத்தால் பூமத்தியரேகையை நான்குமுறை சுற்றிவிடலாமாம்.

27. உங்கள் உடலில் இருந்து மிக மெலிதான ஒளி வெளிப்படுமாம். ஆனால் அதை நமது கண்களால் பார்க்கமுடியாத அளவுக்குத்தான் இருக்குமாம்.

28. ஒரு சராசரி மனிதரின் தொப்புளில் 67 வகையான பாக்டீரியாக்கள் இருக்குமாம்.

29. உங்கள் உடலில் இருந்து ஆண்டுதோறும் 4 கிலோ தோல் செல்கள் உதிருமாம்.

30. குழந்தைகள் குறைந்தபட்சம் ஒருமாதம் ஆகும்வரை கண்ணீர் சிந்தாதாம்.

--------------------------------------------தொடர்வோம்.

"ஜெய் சிரி ராம்"

உத்தரப் பிரதேசம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ஜூன் 14-ம் தேதி 28 வயது இஸ்லாமியஇளைஞர் செல்போன் திருடியதாக சந்தேகத்தின் பேரில், சிலர் அவரை மரத்தில் கட்டி வைத்து, அடித்து, தலையை மழித்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற வற்புறுத்தி தாக்கியதாக்க் கூறப்படுகிறது

ஆனாலும் காவல்துறையினர்  பாதிக்கப்பட்ட இளைஞர் சாஹில் கானையே கைது செய்தனர்., அவரிடம் இருந்து கத்தியைக் கைப்பற்றியதாகக் கூறி ஜூன் 15-ம் தேதி அவரை சிறையிலும் அடைத்தனர். 

வைர் கிராமத்தில் நடந்த சித்திரவதை காணொலி பரவலாதால் அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த  அவரது சகோதரி தொடர்பான காவல்துறையை அணுகிய போதிலும், அவரைத் தாக்கியவர்கள் யார் என்பது தெரிந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புலந்த்ஷாஹர் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) ஷ்லோக் குமாரின் தலையீட்டின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட சௌரப் தாக்கூர், கஜேந்திரா மற்றும் தானி பண்டிட் ஆகிய மூவருக்கு எதிராக  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

தாமி பண்டிட்டைப் தேடிக் கொண்டிருப்பதாகவும் சவுரப் தாக்கூர் மற்றும் கஜேந்திராவும் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவரையே சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்த , ககோட் காவல் நிலையப் பொறுப்பாளர் அமர்சிங்கை, எஸ்.எஸ்.பி. ஷ்லோக் குமார் உடனடியாக பணி இடைநீக்கம் செய்தார். 

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சுரேந்திர நாத் திவாரிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் எஸ்.எஸ்.பி ஷ்லோக் குமார் தெரிவித்தார்.








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?