எதிர்கொள்ள ஒரு அபாயம்.

 தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக வழக்கில், கைது செய்யப்பட்ட எஸ்.ஜி.சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

-ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் கோவிந்தரஜூலு மற்றும் அவரது மனைவி சுஜாதா காந்த ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சுஜாதா காந்த ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபோது 4,400 கோடி வசூல் செய்து மோசடி செய்ததாக புகார்.

இந்திய பொருளாதாரத்தில் இருந்து ரூ 88,032 கோடியை காணவில்லை; அச்சடித்து ரிசர்வ் வங்கிக்கு விநியோகிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கும், ரிசர்வ் வங்கி வாங்கிய நோட்டுகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசமாம். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு வந்த பதிலால் அதிர்ச்சி!

ராமநாதபுரம்: அமைச்சர் எம்.பி ஆதரவாளர்கள் இடையே நடந்த தள்ளுமுள்ளில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தள்ளிவிடப்பட்டார்.


ஆந்திராவில் தனது சகோதரியை துன்புறுத்தியதை தட்டிக்கேட்டதால், 15 வயது சிறுவன் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  


நேபாளத்தின் பல இடங்களில் ஆதி புருஷ் என்ற ராமாயணப் படத்திற்கு தடை! 

படத்தில் இந்தியாவின் மகள் என்ற வசனம் இடம்பெற்றிருப்பதால் சர்ச்சை!

-------------------------------------------

செயற்கை நுண்ணறிவு அபாயம்.

ரோபோக்கள்,கணினிகள் தானாக சிந்திக்க ஆரம்பிப்பதால் எதிர் கொள்ளும் அபீயங்கள் பற்றி பலத் திரைப்படங்கள் வந்துள்ளன.

அதுபோன்ற ஒரு நிலையை மனிதர்கள் எதிர் கொள்ள வேண்டிய நிலை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாகியுள்ளது.

கணினியை கொண்டு ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும் (Algoritms), தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது.

அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது. 

இதனை கொண்டு ஸ்பாட்டிஃபை, யூடியூப் மற்றும் பிபிசி ப்ளேயரில் செயல்பாடுகளை வழிநடத்தலாம்.

அத்துடன் பயனாளர்களுக்கு எந்த பதிவைகளை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கும் இத்தொழில்நுட்பம் உதவலாம்.

வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை பகுப்பாய்வு செய்ய அமேசான் நிறுவனத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. 

அத்துடன் போலி மதிப்பீடுகளை களையவும் இந்த நவீன தொழில்நுட்பத்தை அமேசான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

ChatGPT மற்றும் snapchat’s My AI இரண்டும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சக்தி வாய்ந்த பயன்பாடுகள் அல்லது செயலிகளாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு செயலிகளும் சமீபகாலமாக மிகுந்த கவனம் பெற்று வருகின்றன.

ChatGPT மற்றும் snapchat’s My AI ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறைக்கு சிறந்த உதாரணங்களாக கூறப்படுகின்றன.

அத்துடன் செயற்கை நுண்ணறிவானது, ‘சாட்பாட்’ எனப்படும் கணினி மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது எழுத்து வடிவ உரையாடல் வழியாக மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறது.

கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கதைகள் சொல்லவும், கணினி மென்பொருளை எழுதவும் இந்த செயலிகளை பயன்படுத்தலாம். 

ஆனால் இவ்விரண்டு செயல்களின் பயன்பாடும் பயனர்களுக்கு சில நேரங்களில் தவறான முடிவுகளை அளிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து வரும் மையம் கடந்த மாதம் ஓர் முக்கியமான அறிக்கையை வெளியிட்டது. 

25க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆதரவுடன் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை ‘ஏஐ’ தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அச்சம் தெரிவித்துள்ளது.

சமூகத்தை சீர்குலைக்கும் நோக்கில் தவறான தகவல்களை உருவாக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று அந்த அறிக்கையில் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 அத்துடன், இத்தொழில்நுட்பத்தால் மனிதர்களை விட இயந்திரங்கள் புத்திசாலித்தனமாக மாறக்கூடும் என்றும், அத்தகையதொரு மோசமான நிலை மனித குலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரு சார்பு நிலை மற்றும் பாகுபாட்டைப் பெருக்கும் ‘ஏஐ’ இன் தொழில்நுட்பத் திறன் மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது .

குறிப்பாக, கடன் விண்ணப்பங்கள் மீது முடிவெடுப்பது போன்ற விஷயங்களில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் அது பொதுமக்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் பாதிக்கும் .

அத்துடன் தேர்தல் போன்ற முக்கியமான விஷயங்களில் இத்தொழில்நுட்பம் நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும் .

ஆனால், ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை நாம் வெறித்தனமாக எதிர்க்க வேண்டியதில்லை என்று கூறும் மார்தா லேன் ஃபாக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், அதன் திறன்கள் குறித்த நுட்பமான உரையாடல்கள் அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

உலகம் முழுவதும் 300 மில்லியன் நபர்கள் தற்போது முழுநேரமாக செய்துவரும் பணிகளை ‘ஏஐ’ தொழில்நுட்பம் முற்றிலுமாக மாற்றி அமைக்கும் எனவும், இந்தப் பணிகள் அனைத்தும் இயந்திரமயம் ஆக்கப்படும் என்றும் முதலீட்டு வங்கியான Goldman Sachs அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. 

இந்த எண்ணிக்கை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது அனைத்து விதமான பணிகளை மேற்கொண்டு வரும் மனிதர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்காகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் சட்டம், கட்டடக் கலை உள்ளிட்ட துறைகள் சார்ந்த பணிகளுக்கு, 'ஏஐ’ தொழில்நுட்பத்தால் பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளில் ஏற்கனவே ‘ஏஐ’ தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. 

மார்பக புற்று நோயை அடையாளம் காண தங்களுக்கு உதவும் வகையில் மருத்துவர்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

நுண்ணுயிர்கள் எதிர்ப்புக்கான புதிய மருந்துகளை (ஆன்டிபயாடிக்) கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பணிகளில் விஞ்ஞானிகள் இத்தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றனர். 

உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் அதிகரிக்க ‘ஏஐ’ தொழில்நுட்பம் வழிவகுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

---------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?