முடிவு செய்யும அதிகாரம்

 இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் எனவும், அவர் வகித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், ஆயத்தீர்வை துறை அமைச்சராக முத்துசாமியையும் நியமிக்க ஆளுநருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் குறித்து ஒன்றிய அரசு வெற்று வாக்குறுதிகளை அளித்துள்ளது. பழங்குடியினரை தாக்குவதே பாஜக பின்னணியில் இயங்கும் வகுப்புவாத கும்பல்தான் என உச்சநீதிமன்றத்தில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் மணிப்பூர் பழங்குடியினர் கூட்டமைப்பு பதில் அளித்துள்ளது.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் மோதல் தொடங்கியதால் பதற்றம். பாதுகாப்பு படையினர் கலவரக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்பட்டுத்த கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியல் சாசன முகப்பு வரிகளை வாசிப்பதை கட்டாயமாக்கியும்,சாவர்கர்  புல்,புல் பறவையில். பறந்த கதையையும் நீக்கி  மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிபோர்ஜாய் புயல்  மாலை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாக இரவு கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

 மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கி நள்ளிரவு 11.30 மணி வரை புயல் கரையை கடக்கும் என்றும்,  குஜராத் ஜக்காவு துறைமுகத்திற்கு 140 கி.மீ. மேற்கு-தென்மேற்கில் மிக தீவிர புயல் பிபோர்ஜாய் மையம் கொண்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படிகுஜராத்தில் கரையை கடந்தது பிபோர்ஜாய் புயல், நள்ளிரவில் சவுராஷ்ட்ரா – குச் மாவட்டங்களுக்கு இடையே கரையை கடந்தது. இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கன மழையால், 900க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் 8 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திமுகவினரை சீண்டி பார்க்க வேண்டாம். அமைச்சரான செந்தில் பாலாஜியை தீவிரவாதி போல் அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?

செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல். அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா என முதலமைச்சர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்பி, மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷணுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

--------------------------------------------------------

செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் தொடர்பான முதல்வரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்து விட்டார்.

அமலாக்கத்துறை சோதனைக்கு முன்னரே ஆளுநர் கடிதம் எழுதுகிறார் என்றால் இதற்கு பின்னணி என்ன? 

ஏற்கனவே பா.ஜ.க. செயல்திட்டம்சங்கிகளுக்கு தெரிந்திருக்கிறது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும்.செயலற்றவராக்க வேண்டும் என்பதுதான் அந்த செயல் திட்டம். அதைத்தான் ரவியும் செயல்படுத்த முனைகிறார்.

செந்தில் பாலாஜி மீது வழக்கு இருப்பதால் அவரை நீக்க ஆளுநர் கோரியிருந்தார். ஆளுநர் அனுப்பிய கடிதத்திற்கு 1ம் தேதியே முதல்வர் பதில் அனுப்பிவிட்டார்.

வழக்கு இருப்பதால் மட்டுமே பதவி நீக்கம் செய்ய முடியாது,தீர்ப்புபடிதான் நடவடிக்கை எடுக்க முடியும். அமைச்சரவையில் யார் இருக்க வேண்டுமென முடிவு செய்யும அதிகாரம் ஆளுநர் ரவிக்கு இல்லை.  

அமைச்சர்களுக்கு பதவியேற்பு உறுதிமொழி,பாதுகாப்பு போன்ற உறுதிமொழி எடுக்கச் செய்ய மட்டும்தான் ஆளுநருக்கு பொறுப்பு உண்டு.

அதைச்சர்கள்,துறைகளை முடிவு செய்வது முலமைச்சர்தான்.

இப்போது அமைச்சரவை துறைகள் மாற்றம் தொடர்பாக அவருக்கு தகவல்தரப்படுகிறதே ஒழிய ஒப்புதல் கேட்டு அல்ல.

 மத்திய அமைச்சரவையில் அமித்ஷா உட்பட 33 பேர் மீது வழக்கு உள்ளது .

அப்படி பார்த்தால் ரவிஅவருடைய கட்சியான  பாஜகவுக்கு தான் கடிதம் எழுத வேண்டும்  என்று  அமைச்சர் பொன்முடி கூறினார்.

-----------------------------------------------

தமிழுக்கு தீங்கு என்றால் துடித்தவர்”

1893ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கு பத்தாவது மகனாக பிறந்த கருமுத்து தியாராஜ செட்டியார் இலங்கையில் உள்ள கொழும்பு புனித தோமையல் கல்லூரியில் கல்வி பயின்றார்.

அங்குள்ள மலையக தோட்டத்தொழிலாளர்கள் நலனை வலியுறுத்தி பத்திரிக்கை ஒன்றையும் நடத்தினார். 

மலையக தமிழர்களுக்கு உடலில் அடையாள சூடு போடும் பழக்கத்தை எதிர்த்தும் தியாகராஜ செட்டியார் போராடினார்.

1925ஆம் ஆண்டு மதுரையில் மீனாட்சி மில் என்ற பெயரில் நூல் மற்றும் நெசவு ஆலையை அமைத்த அவர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தனித்தமிழில் வெளியாகும் தமிழ்நாடு என்ற பத்திரிக்கையை நடத்தினார். இலங்கையில் ஆங்கில நாளிதழில் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும் ஆங்கில சொற்கள் கலவாமல் தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் வழக்கமாக கொண்டார்.

தமிழறிஞர்கள் சிற்கைலாசம்பிள்ளை, பண்டிதமணி, நாவலர் சோமசுந்தர பாரதியார், வரத நஞ்சய பிள்ளை, முனைவர் இலக்குவனார், திருவாசகமணி பாலசுப்பிரமணியம், ஔவை துரைசாமி பிள்ளை, கி.ஆ.பெ.விஸ்வநாதம், மாபொசி உள்ளிட்டோருடன் நட்பு பாராட்டியது மட்டுமின்றி அவர்களது படைப்புகளுக்கும் ஆதரவு நல்கினார்.

1917ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு விடுதலைக்காக போராடிய செட்டியாரின் வீட்டில் தான் மதுரை வந்திருந்த மகாத்மா காந்தி தங்கினார்.

காங்கிரஸ் அனுதாபியாக இருந்த நிலையில் 1965ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் பின்னணியில் இருந்து வெற்றி பெற காரணமாக இருந்தவர்களில் கருமுத்து தியாகராஜருக்கு முக்கிய இடம் உண்டு.

மொழிப்போரில் அவரது பங்களிப்பு குறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ”அன்றைக்கு நடந்த மாணவர் போராட்ட மொழிப்புரட்சியில் சிக்கியவர்கள், சீரழிந்தவர்களை காப்பாற்ற முன்வந்த தமிழ் ஆர்வலர்களில் ஒருவர் கருமுத்து அவர்கள். தமிழை வளர்த்தவர், தமிழுக்கு தீங்கு என்று சொன்னால் துடித்தவர்” என குறிப்பிட்டுள்ளார்.

14 ஜவுளி ஆலைகள், 19 கல்வி நிலையங்கள், மதுரை வங்கி, மதுரை காப்பீட்டு நிறுவனம் ஆகிய தொழில்களை நிறுவி நடத்திய கலைத்தந்தை கருமுத்து தியாகராஜ செட்டியார் தனது 81ஆம் அகவையில் 1974ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி மறைந்தார்.

-------------------------------------------------

உங்கள் உடல் தரும் பிரமிப்பு.

11. உங்கள் உடலில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் வியர்வைத் துளைகள் உள்ளன!


12. உங்கள் உடலில் இருந்து நிமிடத்துக்கு 30 ஆயிரம் இறந்த செல்கள் உதிர்கின்றன!


13. நீங்கள் 70 வயது வாழ்ந்திருப்பீர்களானால் உங்களது இதயம் அதுவரை 250 கோடிமுறை துடித்திருக்கும்!


14. ஒருவர் தன் வாழ்நாளில் முழுமையாக ஒரு ஆண்டு கழிவறைக்குள்ளேயே நேரத்தை செலவிட்டிருப்பார்கள்!


15. சராசரியாக ஒருநாளைக்கு நீங்கள் வெளியிடும் ஆபான வாயுவை வைத்து ஒரு பெரிய பார்ட்டி பலூனை நிரப்பிவிடலாம்!


16. ஒரு மாதத்தில் நீங்கள் கழிக்கும் சிறுநீரை வைத்து ஒரு குளியல் தொட்டியை நிரப்பி விடலாம்!


17. ஒவ்வொரு நொடிக்கும் உங்களது உடல் 2 கோடியே 50 லட்சம் புதிய செல்களை உருவாக்குகிறது.


18. உங்கள் உடலில் உள்ள மிகப் பெரிய எலும்பு ஃபெமர் எனப்படும் தொடை எலும்பு. மிகச் சிறிய எலும்பு ஸ்டிர்அப் எனப்படும் உங்கள் செவிப்பறையில் அமைந்திருக்கும்.


19. உங்கள் முழங்கையை உங்கள் நாக்கால் வருட முடியாது. சிலர் நினைப்பார்கள் முடியும் என்று. நீங்கள் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.


20. சந்திரன் உங்கள் தலைக்கு மேல் இருக்கும் சமயத்தில் உங்களது உடல் எடை சற்றே குறைந்திருக்குமாம். சராசரியாக 100 கிலோ எடையுள்ளவர்களுக்கு 50 கிராம் குறையுமாம்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?