கண்ணாடி போடுவாயா நீ

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று துவங்குகிறது. சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ள விழாவில் நூற்றாண்டு விழாவுக்கான இலச்சினை வெளியிடப்படுகிறது.

புழல் சிறையில் காவலர்கள் நடத்திய சோதனையில் விஜயராஜ் என்ற கைதி படுக்கையில் மறைத்து வைத்திருந்த செல்போன், 2 பேட்டரிகள், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. கொடியரசன் என்ற கைதி படுக்கையில் மறைத்து வைத்திருந்த 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்க குடியரசுத் தலைவரை சந்திக்க விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. டெல்லி எல்லையை முற்றுகையிடும் போராட்டம் குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும்.

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் மேல் முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. 5

 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கோகுல்ராஜ் தாயார் தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

-----------------------------------------------------------

கண்ணாடி போடுவாயா நீ

பாலன்பூர் தாலுகாவில் உள்ள மோட்டா கிராமத்தில் செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது, உயர் சாதியினரால் தாக்கப்பட்ட   தாயும் ,ஜிகர் ஷெகாலியாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கண்ணாடி அணிந்ததற்காக அதிருப்தி அடைந்த தன்னையும் அவரது தாயையும் தாக்கியதாக பாதிக்கப்பட்ட ஜிகர் ஷெகாலியா அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலைஜிகர் ஷெகாலியா தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவர் அவரிடம் வந்து துஷ்பிரயோகம் செய்து, ”இப்போது எல்லாம் நீ வானத்தில் பறக்கிறாய்” என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

அதே இரவில், புகார்தாரர் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, ​​ராஜபுத்திர குடும்பப்பெயர் கொண்ட சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் அவரை நோக்கி வந்தனர்.

 தடிகள் போன்ற ஆயுதங்களுடன் வந்து, நீ ஏன் நல்ல ஆடை அணிந்து கருப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறாய் என்று கேட்டுள்ளார்கள்.

 பின்னர் அவரை தாக்கி பால் பண்ணை பின்னால் இழுத்துச் சென்றனர்.

அவரை காப்பாற்ற அவரது தாய் விரைந்து சென்றபோது, ​​அவர்கள் அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். 

அவர்கள் அவரது ஆடைகளையும் கிழித்துள்ளனர் 

குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கும் எதிரான எஃப்.ஐ.ஆர் இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) பிரிவுகளின் கீழ், கலவரம், சட்டவிரோத கூட்டம், பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைத்தல், தானாக முன்வந்து காயப்படுத்துதல், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மீது பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

--------+----------------+--------------------+

கலைஞர் இல்லம் தேடி சத்ய சாய்பாபா வந்தார்.. உலகமே அசந்தது.. பாபாவை பார்க்க மைக்கேல் ஜாக்சன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு கிடைக்காமலே இறந்து போனார்... 

சச்சின் பல நாள் காத்திருந்து நேரில் சந்தித்தார்.. 

எவர் வீட்டிற்கும் பாபா பிற்காலத்தில் போனது கிடையாது..

பிரதமரோ, ஜனாதிபதியோ, தேடி வந்துதான் பாபாவைப் பார்க்க வேண்டும்..

அப்படிப்பட்ட  சத்ய சாய் பாபா, கலைஞரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அவரது இல்லத்திற்கே போய், மாடி ஏறி கலைஞரைச் சந்தித்தது கண்டு ஆத்திகர்கள் ஆடிப்போனார்கள்....  

 நாத்திகர்கள் ஆத்திரப்பட்டார்கள்.


------------------------------------------

இளையராஜா-80.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இசைஞானி இளைய ராஜாவின் பிறந்த நாள் இன்று.

தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் இராமசாமி சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு மகனாக கடந்த 1943ம் ஆண்டு ஜூன் 2ந் தேதி பிறந்தார் இசைஞானி இளையராஜா. 

பாவலர் வரதராஜன், தாவீது டேனியல் பாஸ்கர் (ஆர். டி. பாஸ்கர்), கங்கை அமரன் என்ற அமர் சிங் ஆகிய மூவரும் இவரது உடன்பிறந்தவர்கள் ஆவார்.

 இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.

சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

 1961 இல் இருந்து 1968 வரை பாவலர் வரதராஜன் சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொண்டார்.

1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் தலைநகர் சென்னைக்கு வந்தார். 

சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கித்தார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். மேலும் இசையின் நுணுக்கங்களையும் அவரிடமே கற்று தேர்ந்தார். 

பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் கிளாசிக்கல் கிட்டார் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

இளையராஜா எஸ்பிபியின் கூட்டணி ரசிகர்களை அரை நூற்றாண்டுகள் கட்டிப்போட்டது. நடிகர்கள்  மோகன், ராமராஜன் போன்றோரின் சினிமா வாழ்க்கைகைக்கு அஸ்திவாரமிட்டதில் இளையராஜாவிற்கும் பங்குள்ளது.

இவருக்கு இசைஞானி பட்டத்தை கலைஞர் தான் வழங்கினார்.

.இப்படி 1980முதல் கோலோய்ச்சிய இளைய ராஜா இன்றும் தன் ரசிகர்களை தன் கையில் வைத்துள்ளார்.

இசையில் கட்டிப்போடும் இளையராஜா தனிப்பட்ட வாழ்க்கையில் தனது சகோதரர்கள் உட்பட யாரையும் வளரவிட்டதில்லை.பிறருக்கு மரியாதையும் தருவதில்லை.

மோசமான வார்த்தைகளால் அடுத்தவர் மனதை நோகடிப்பதில் மகிழ்பவர்.தான என்ற தலைக்கனம் கொண்டவர் இவர்கள் கும்பமே பாவலர் வரதராஜன் காலம் முதல் பொதுவுடமை கட்சியைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் இளையராஜா,கங்கை அமரன இருவரும் வலதுசாரி,சங்கிகள் .

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டுப் பேசி அனைவர் எதிர்ப்பையும் சம்பாதித்தார்.அதற்காகவே மோடி இளையராஜாவை மாநிலங்களவை உறுப்பினர் பதவியை(MP) பரிசளித்தார்.

இசைஞானி இளைய ராஜாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு அரசியல்கட்சி தலைவர்கள்,திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவகத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

---------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?