பட்டியலிடுங கள்

 9 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பாஜக நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட தயாரா? 

சென்னை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

• பாஜகவின் செல்வாக்கு சரிவதால், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு என்ற பேச்சு எழுந்துள்ளது. எனவே தேர்தலுக்கு தற்போதே திமுகவினர் தயாராக வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிட தாண்டியது வெப்பம். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

• பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தருமபுர ஆதின மடத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. சிவிகை பள்ளக்கில் ஆதீனத்தை அமரவைத்து தோளில் பக்தர்கள் சுமந்து சென்றனர்.


பீகார் மாநகராட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்னும் சிறிது நேரத்தில் துவங்கவுள்ளது. இந்த தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.

இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்டைந்தார். அவரை திரைத்துறை பிரபலங்கள், தொழில் துறையினர் உள்பட பல்வேறு தரப்பு பிரமுகர்களை சந்தித்தார்.

வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத பெரும் முதலாளிகள் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற கனரா வங்கியின் ஊழியர்கள் சங்க மாநாட்டில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

• கோடியக்கரை அருகே படகு கவிழ்ந்ததால் 5 மணி நேரம் வேதாரண்யம் மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அந்த 4 மீனவவர்களையும் சக மீனவர்கள் மீட்டனர்.


தேர்தல் ஏற்பாடுகள்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்டோர் உள்துறை அமைச்சரை வரவேற்றனர். 

பின்னர் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. ஹோட்டலுக்கு சென்ற அமைச்சர் அமித்ஷாவை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.

இதனை தொடர்ந்து அரசியல் சாராத பிரபலங்களுடன் அமைச்சர் அமித்ஷா சுமார் இரண்டரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார். திரைத்துறை, விளையாட்டு, கல்வி, மருத்துவம், தொழிலதிபர்கள் என பல்வேறு துறையை சேர்ந்த 24 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகரன், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்நல்லி குப்புசாமி, வின் தொலைக்காட்சி தேவநாதன், விளையாட்டு துறையைச் சேர்ந்த லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன், பாஸ்கரன், அனிதா பால்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழில்துறையில் இருந்து இந்திய சிமெண்ட்ஸ், செட்டிநாடு சிமெண்ட்ஸ், தாஜ், ஆர்காட் நவாப், டேப்லட்ஸ் இந்தியா, பி.கே.எஃப் குழுமத்தினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

2024 மக்களவைத் தேர்தல் காலத்தில் பாஜக வை திரையுலக,தொழிற் பிரமுகர்கள் ஆதரவாக இருக்கின்றனர் எனக் காட்டவே இது போன்ற சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறது பாஜக.

அந்த பிரமுகர்களும் பாஜக ஆதரவாக இல்லை என்றாலும் வருமானவரித்துறை,அமுலாக்கத் துறை போன்றவை பாஜக கையில் இருப்பதாலும்,அதை அவர்கள் உபயோகிக்பும் முறை பற்றி அறிந்திருப்பதாலும் இந்த கூட்டங்களில் வேறு வழியின்றி கலந்து கொள்கின்றனர்.

முன்னதாகசென்னை விமானநிலையத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கார் வெளியே வந்த போது, சாலையின் இருபுறங்களிலும் இருந்த மின் விளக்குகள் அணைந்தன.

இந்நிலையில், காரில் இருந்து இறங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அமைச்சர் புறப்பட்டு சென்றதும், மின் தடையை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்த மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, போரூர் துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். 
பின்னர் பேட்டி அளித்த அவர், காற்று காரணமாக, மின்தடை ஏற்பட்டது என்றார்.
---------------------------------------------

----------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?