சட்டம் என் கையில்

 பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணின் கருவை கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் முறையிடுகின்றனர். அந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் தவே,

 ‘‘ அந்தக் காலத்தில் பெண்கள் 14&15 வயதில் திருமணம் செய்து கொள்வதும், 17 வயது ஆவதற்குள் குழந்தை பெற்றுக் கொள்வதும் இயல்பானது தான். வேண்டுமானால் மனுஸ்மிர்தி நூலை படித்துப் பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள்’’ 

என்று கூறியிருக்கிறார்.

திருமணம் செய்வதாகக் கூறி தம்முடன் பழகி, ஏமாற்றிய காதலனுடன் திருமணம் செய்து வைக்க ஆணையிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்,‘‘ அந்த பெண்ணுக்கு 'மாங்கல்ய பாக்கியம் இல்லை' என்பதால் அவரை திருமணம் செய்ய முடியாது’’ என்று கூறுகிறார்.

அதைக்கேட்ட நீதிபதி பிரிஜ்ராஜ் சிங், அப்படியா? என்று பதறியதுடன், 

அவரது ஜாதகத்தை ஆராயந்து அந்தப் பெண்ணுக்கு மாங்கல்யா பாக்கியம் இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி லக்னோ பல்கலைக் கழகத்தின் ஜோதிடத்துறைக்கு ஆணையிட்டுள்ளார்.

நீதிமன்றங்கள் பிறப்பிக்கக்கூடிய தீர்ப்புகள் சமீப காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஆடைகள் இல்லாமல் குழந்தைகள் மார்பகத்தை தொடுவது, அதாவது நேரடியாக உடலில் கை வைக்காமல் இருந்தால் வெறும் இந்திய தண்டனை சட்டம் 354 (IPC 354 - Outraging a woman's modesty. அதாவது, ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல்) கீழ்தான் வரும் என்றும் கடும் தண்டனை விதிக்கப்படும் போக்ஸோவுக்கு கீழ் வராது என்று அதிர்ச்சியளிக்கும் நாக்பூர் கிளை தீர்ப்பு வழங்கியது.

கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. சட்ட ரீதியாகப் பார்க்கும் பொழுது இறந்து போன பெண் உடலுடன் உறவு கொள்வது குற்றமாகாது என உத்தரவிட்டது. 

இந்த செயலில் ஈடுபட்ட நபரையும் விடுதலை செய்தது கர்நாடக நீதிமன்றம்.

அதேபோல் குஜராத் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு செஷன் கோர்ட், பசு மாட்டின் கோமியம் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் மருந்து, பசுவின் சாணத்தை வீட்டில் பூசினால் அணுக்கதிர்வீச்சு ஊடுருவாது எனக் கூறியது.

அந்த வகையில் பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணுக்குச் செவ்வாய் தோஷம் இருக்கின்ற காரணத்தினால் நான் அவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என குற்றவாளி மறுத்த நிலையில் அந்த பெண்ணுக்கு உண்மையில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா என ஜோதிடர்களைக் கண்டறிய அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆக நீதிமன்றத்தில் இருந்து  தற்போது வருகின்ற தீர்ப்புள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி வழங்கப் படுவதாகத் தெரியவில்லை.

மனுஸ்கிருதி மறுவடிவாகவே உள்ளது.திரேதாயுகத்து இதிகாசகாலச் சட்டங்களாகத்தெரிகிறது.

பால்யவிவாகத்தை நியாயப்படுத்தும் விதமாகவே உள்ளது.ஆளுநரே தான் பால்ய விவாகம்தான் செய்தேன் என பெருமையாகக் கூறுகிற அளவு கலாச்சார சீர்கேடுள்ளது.

கூடுமானவரை நமது பிரச்ணைகளை நீதிமன்றம் செல்லாமல் நாமே பேசி தீர்ப்பதுதான் நல்லதாகப்படுகிறது.

----------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?