தேர்தல் ஆலோசனை

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 இடங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்து. சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.

• வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. 

ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தில் அதிமுக கையெழுத்திட்டதால்தான் பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். அதிமுக ஆட்சியில் மின் கட்டணம்செங்குத்தாக உயர்த்தப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  குற்றம் சாட்டியுள்ளார்.

• நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சிபெற்ற 1.43 லட்சம் மணவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. வளாக நேர்க்காணலில் பணி ஆணை பெற்றதாக திட்டக்குழு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ்களை வழங்கும் உத்தரவு ரத்தான விவகாரம். குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்துள்ளார்.

ஹைத்ரபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம் வாங்குவதற்காக 3 லட்சம் பேர் திரண்டனர். கொரோனா காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படுவதால் ஏராளமானோர் திரண்டனர்.

*2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாட ஒன்றிய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். 

நாளை வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவை சந்திக்க  அனுமதி கேட்டுள்ளனர். 

*சிறிய விமான விபத்தின் காரணமாக 40 நாட்களுக்கு முன் அமேசான் காடுகளில் காணாமல் போன 4 குழந்தைகளை கடுமையான தேடுதல் வேட்டை நடத்தி கண்டுபிடித்துள்ளதாக கொலம்பிய அதிபர் கஷ்டாவா பெட்ரோ தெரிவித்துள்ளார்.


---------------------------------------------

கிரேஸி மோகன்

பொறியியல் பட்டதாரியான கிரேஸி மோகன் சிறு வயது முதலே நாடகங்கள் மீது பெருங்காதல் கொண்டிருந்தார்.

அக்டோபர் 16, 1952 இல் சென்னையில் பிறந்தார் கிரேஸி மோகன். இவரது இயற்பெயர் மோகன் ரங்காச்சாரி. இவர் கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். கல்லூரியில் படிக்கும் காலங்களில் கிரேட் பேங்க் ராபரி என்ற நாடகத்தை எழுதி நடித்தார் மோகன். அந்த நாடகம் மோகனுக்கு நல்ல பெயரை ஏற்படுத்எழுதினார்.

இது அவருக்கு சிறந்த நடிகர் மற்றும் எழுத்தாளர் விருதை பெற்று தந்தது. இதற்கான பாராட்டு விழாவில் மோகனுக்கு விருது வழங்கியவர் உலக நாயகன் கமல். அன்று தொடங்கிய அவர்களது கூட்டணி பின்னாளில் பல வெற்றிப்படங்களில் தொடர்ந்தது.

கிரேஸியின் இளைய சகோதரர் மது பாலாஜியின் நாடகக் குழுவிற்காக சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் ஸ்கிரிப்ட்கள் எழுதப்பட்டன. 1976 இல் நாடகப்ரியாவுக்காக கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் அவர் எழுதிய முதல் முழுநீள நாடகம். அவர் குத்தகைதாரர் கட்டளைகள் மற்றும் ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட் ஆகியவற்றிற்கும் ஸ்கிரிப்ட்களை எழுதினார்.

1979 இல் கிரேஸி கிரியேஷன்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இந்த குழு அதன் அசல் ஸ்கிரிப்ட்களுடன் 30 நாடகங்களை உருவாக்கியது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 6,500 நிகழ்ச்சிகளை நடத்தியது. அவரது நாடகமான சாக்லேட் கிருஷ்ணா மூன்று ஆண்டுகளுக்குள் 500 முறை அரங்கேற்றப்பட்டது. ஒரு நடிகரான அவரது சகோதரர் மது பாலாஜி அவரது அனைத்து நாடகங்களிலும் ஹீரோவாக நடிக்கிறார்.

அவர் பணியாற்றிய முதல் திரைப்படம் கே.பாலசந்தரின் பொய்க்கால் குதிரை, இதற்கு அவர் வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படமே மோகன் முயற்சியால் தயாரிக்கப்பட்ட திருமணம் என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது . சதி லீலாவதி , காதலா காதலா , மைக்கேல் மதன காம ராஜன் , அபூர்வ சகோதரர்கள் , இந்தியன் , அவ்வை சண்முகி , தெனாலி , பஞ்சதந்திரம் மற்றும் வசூல் ராஜா எம்பிபிஎஸ், உள்ளிட்ட பல நகைச்சுவைத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். இதில் சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தும் உள்ளர்.1

976இல் எஸ். வி. சேகர் அவர்களின் நாடகமான "கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானார் மோகன். அந்த நாடகம் பெறும் வரவேற்பைப் பெற்றதால் 'கிரேஸி' என்ற அடைமொழியுடன் 'கிரேஸி' மோகன் என்று அழைக்கப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்கியதற்காக கலைமாமணி பட்டத்தை அவருக்கு வழங்கியது. 38 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம், நுண்கலைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளுக்காக அமெரிக்காவின் மேரிலாந்தின் ஆளுநரால் விருது வழங்கப் பட்டது.

மோகன் 39 ஆண்டுகளுக்கும் மேலாக நன்கொடை மற்றும் பரோபகாரர். அவர் தனது நாடக டிக்கெட்டுகளை விற்று கிடைத்த பணத்தில் இருந்து இதய அறுவை சிகிச்சைகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு நன்கொடை அளித்தார். 1999 முதல் டாக்டர் வி.சாந்தாவால் நடத்தப்படும் அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு நன்கொடைகள் வழங்கினார்.

அவர் எழுதிய ‘க்ரேஸி அபௌ ரமணன்’ புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இந்தியக் கலாச்சாரம் கற்பிப்பதற்காக அனுப்பப்படுகிறது.

நாடகக் கலைஞர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், எழுத்தாளர், சினிமா வசனகர்த்தா, நடிகர், நகைச்சுவைக் கலைஞர், என பன்முக ஆளுமைகொண்ட கிரேஸி மோகன் 2019 ஜூன் 10 அன்று இயற்கை எய்தினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?