நம்பிக்கை தருகிறது!

 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒன்றாக போராட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ...

பிரதமர் மோடிக்கு பிரத்யேக டி-ஷர்ட் ஒன்றை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நினைவு பரிசாக வழங்கியுள்ளார்.பழனிசாமி


திருப்பூரில் புகழ்பெற்ற காதர்பேட்டை பனியன் பஜாரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில், 50 கடைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன. 3 தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நம்பிக்கை அளிக்கவகையில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கருணாநிதி பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணிகள் ஐஐடி நிபுணர்களின் உதவியோடு விரைவில் தொடங்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Integrated Command & Control மையத்தில், “சென்னை பாதுகாப்பான நகரம்” (Chennai Safe City Project) என்ற திட்டத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். 1,750 பாயிண்டுகளில் 5,000 புதிய கேமராக்கள் வைக்ப்பட்டு, காவல் ஆணையர்கத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டறை மற்றும் உத்தரவு மையத்திலிருந்து கண்காணித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அலெர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கு வழங்கப்படும் சாகித்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய புரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்தியளவில் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்க எதிர்கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

• திறமையும், தொழில்நுட்பமும் சேர்ந்தால் நல்ல எதிர்காலம் உருவாகும் என அமெரிக்காவில் பிரதமர் மோடி பேசினார். பயங்கரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

• ஆந்திராவில் பலத்த காற்றால் பொது கூட்ட மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

• திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை சிறுத்தை தாக்கியதன் எதிரொலி, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

• விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு ராகுலை வலியுறுத்திய லாலு பிரசாத்.

-----------------------------------------------

பன்மொழிப்புலவர்

பிறந்த தினம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று கவிபாடிய பாரதியார் எப்படி 14 மொழிகளை அறிந்திருந்தாரோ அப்படி அதே போல் பன்மொழிகளை கற்று தமிழ்த்தொண்டு ஆற்றிய வெகுசிலரில் ஒருவர்தான் பன்மொழிப்புலவர் அப்பாதுரையார்.

இந்தியாவின் மொழிச்சிக்கல்” என்ற ஆங்கில நூலை எழுதியதால் தனது ஒன்றிய அரசுப்பணியை இழந்தார்.


கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் காசிநாதப்பிள்ளை-முத்துலெட்சுமி அம்மாள் இணையருக்கு 1907ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பிறந்தார். இவருக்கு பெற்றோர்கள் சூடிய பெயர் “நல்லசிவம்” என்பதாகும்.

தனது தொடக்கக்கல்வியை ஆரல்வாய் மொழியிலும், உயர்க்கல்வியை நாகர்கோவிலிலும் பயின்ற அவர், தனது கல்லூரி படிப்பை திருவனந்தபுரத்தில் பயின்று ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

இந்தி மொழியில் “விஷரத்” வரை தேர்ச்சி அடைந்த அவர், திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலை பட்டம் பெற்றார்.

சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார்.

திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராக பணியாற்றினார்.

காரைக்குடி அமராவதி புதூர் குருகுலப் பள்ளியில் அப்பாதுரையார் தலைமை ஆசிரியராக இருந்த போது, இவரிடம் கல்வி கற்றவர்களில் இன்று பிறந்தநாள் காணும் கவியரசர் கண்ணதாசனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் செய்தித் தொடர்பு துறையில் 1947 முதல் 1949 ஆம் ஆண்டு வரை பணியாற்றியபோது “இந்தியாவின் மொழிச்சிக்கல்” என்ற ஆங்கில நூலை எழுதியதால் தனது அரசுப்பணியை இழந்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம்-தமிழ் அகராதி தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை ஆசிரியராக பணியற்றியதுடன், தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராகவும் 1975 முதல் 1979 வரை இருந்தார்.

இந்தி ஆசிரியராக இருந்த அப்பாதுரையார், 1938-39 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது, அதனை ஆதரித்ததுடன் அப்போராட்டங்களிலும் கலந்து கொண்டார்.

அவரின் ‘தென்னாட்டு போர்க்களங்கள்’ என்ற வரலாற்று நூல் போர்க்காரணங்கள், போர்களின் பின்புலங்கள்,போர் செயல்கள், போர் ஏற்படுத்திய விளைவுகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து விரிவாக பேசும் வகையில் அமைந்தது.

’தென்னாநாட்டு போர்க்களங்கள்’ நூலைப்படித்த பேரறிஞர் அண்ணா “இந்த நூல் என்னை மிகவும் கவந்தது. அந்த நூலின் ஓரே ஓர் ஏட்டை எழுத அவர் எத்ட்னனை ஆயிரம் ஏடுகளை தேடி பார்த்திருக்க வேண்டும்.

 எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்களை திரட்டி பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன்” என நெகிழ்ச்சியாக குறிப்பிடுள்ளார்.

பன்மொழியை ஆராய்ந்து தமிழ்ச்சேவையாற்றிய அப்பாதுரையார் 1989ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி மறைந்தார்.

-------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?