அண்ணாமலயே காரணம்!

 மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. 

அப்போது வழக்கறிஞர் செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கல் வெளியானது.

கடந்த ஜூன் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள இல்லங்கள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறைகளில் அமலாகத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தினர்.

 மேலும் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அசோக்கின் வீடு, ராயனுரில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவரிடன் வீடு உட்பட 8 இடங்களில் சோதனை நடத்தினர்.

அமலாகத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி அதிகாலையில் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜிக்கு காலையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவனை நிர்வாகமும், ஈ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகமும் பரிந்துரை செய்திருந்தனர். 

 பின்னர் காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். 

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அவரது மனைவி மேகலா தொடந்த ஆட்கொணர்வு மனுவின் மீதான விசாரணை கடந்த ஜூன் 22ஆம் தேதி நடந்தது, 


அதில் செந்தில் பாலாஜி தரப்பின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்பதற்காக வரும் 27ஆம் தேதிக்கு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது குறித்த அட்கொணர்வு மனுவில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். 

கைது உத்தரவில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுக்க கோரி மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை முறையாக பரிசீலிக்கவில்லை என்றும் மனுவை முறையாக பரிசிலீக்காமல் நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தனது கணவருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டு முதல் மத்திய அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி மிரட்டி பேசி உள்ளதாகவும்,அதைப் போலவே நடந்திள்ளது செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா அம்மனுவில் குற்றம் கூறியுள்ளார்.

-------------------------------------


வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காாரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?