கலவரம். நிலவரம்

 செந்தில் பாலாஜியை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லக்கூடாது உடல்நிலை,


 சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று விசாரிக்க வேண்டும். 

மூன்றாம் தர விசாரணை, எவ்வித துன்புறுத்தலும் செய்யக்கூடாது. போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும் என அமலாக்க இயக்குனரகத்தின் துணை இயக்குநருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

------------------

2010ல் அமித்ஷா சிறையில் இருந்த போது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டதற்கு அவர் கோபப்பட்டு இதனை

செய்வதாக சிலர் கூறுகின்றனர். 

எடுத்தோம், கவிழ்த்தோம் என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல என கூறியுள்ள சபாநாயகர் அப்பாவு, முதல்வர் சொல்லியோ அல்லது செந்தில்பாலாஜி தாமாகவோ பதவி விலகலாம், இதில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை கடந்த ஆண்டுகளில் பல அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்த வரலாறு உள்ளது செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது குறித்து நெல்லையில் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

----------------------

சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் தலா 12 மரக்கன்றுகளை நட வேண்டும் என தெற்கு ரயில்வேவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மேலும், மரக்கன்றுகளை நடுவதிலும், மரங்களை இடமாற்றி வைப்பதிலும் குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை நாட பசுமை தாயகம் அமைப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரிய பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் தொடர்ந்த வழக்கு முடித்திவைக்கப்பட்டது.

--------------------

ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பேருந்துகளை பழுது பார்க்கவும் தமிழக அரசு திட்டம்.

போக்குவரத்துத்துறைக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு.

---------------------

விருதுநகர் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமை ஆசிரியர் கருப்பசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

--------------------------

தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு நடைபெற்ற போது இ.பி. எஸ் என்ன செய்தார்.

பாஜக மிரட்டலுக்கு பயந்து மாற்று கட்சிக்கு எம்பி பதவியை விட்டுக்கொடுத்தவர் ஈபிஎஸ் மருத்துவமனையில் செந்தில்பாலாஜியை முதல்வர் நேரில் சென்று பார்த்ததை ஈபிஎஸ் கொச்சைபடுத்தி பேசுகிறார் .

எந்தவித விசாரணைக்கும் தயார் என முதல்வரும் தெரிவித்திருந்தார் செந்தில்பாலாஜியிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி..

-----------------------

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின்.

ராஜேஷ் தாஸ் மனுவை பரிசீலனை செய்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு ஜூலை 17ஆம் தேதி வரை தண்டனை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவு கெடுவுக்குள் மேல்முறையீடு செய்து அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்- 

நீதிபதி புஷ்பராணி நீதிமன்றத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியேறினார் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் .

---------------------------

“முதல்வரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது. 

ஆளுநர் சட்டப்படி சட்ட ஆலோசனைகளை பெற்று நடந்து கொள்ள வேண்டும். அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என முடிவு செய்ய முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. அமைச்சரவை இலாகாக்களை மாற்றி அனுப்பும் கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனை தருகிறது- தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்.

-----------------------

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சின்னமலையில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழகங்களின் சுயாட்சி தன்மையை ஆளுநர் முடக்குவதாக குற்றச்சாட்டு.

----------------------------

மதுரையில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளர் உயிரிழந்தார் என்றும் ,

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ,பொய்யான தகவலகளைத் தெரிவித்திருந்ததாக கூறி மதுரை சைபர் கிரைம் போலீசார் நேற்று நள்ளிரவில் பா.ஜ.கட்சியைச் சார்ந்த எஸ்.ஜி.சூர்யா எனபவரைகைது செய்தனர்.

இவர் பாஜக தலைவர் அன்னாமலைக்கு மிகவும் வேண்டியவர்.வலக்கரமாம்.

-----------------------------------------------------

மணிப்பூர் கலவரம்.

நிலவரம்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஒன்றிய இணையமைச்சர் ஒருவரின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 

இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் மாநில அமைச்சர் ஒருவரின் வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஒன்றிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் இம்பால் இல்லத்தில் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஒரு கும்பல் தீ வைத்தது.


இது மாநில அரசின் முழுமையான தோல்வி என அவர் கூறினார். 

சிங், மணிப்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. ஆவார்.

மேலும், மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கோங்பாவில் அமைந்துள்ள சிங்கின் இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

முதல் தாக்குதல் மே 25 அன்று இரவு அவர் வீட்டில் இருந்தபோது நடத்தப்பட்டது. 

ஆனால் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலின்போது வீட்டில் யாரும் இல்லை.

அங்கிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தியதாக வீட்டில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ராமு தானோஜம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர், “இரண்டு புறங்களில் இருந்தும் கும்பலாக சிலர் வந்தனர். அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர்” என்றார். இது தொடர்பாக ஏ.என்.ஐ.யிடம் பேசிய சிங், “இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அன்றைய தினம் சாதாரணமாகதான் இருந்தது. ஆனால் இரவு நேரத்தில் கும்பலாக வந்து தாக்கியுள்ளனர்.

பெட்ரோலை கொளுத்தி வீசியுள்ளனர். இது என் உயிரைக் கொல்லும் முயற்சியாகதான் உள்ளது.

 மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.ஒன்றிய உள்துறை அமைச்சரும்,பிரதமரும் மணிப்பூர் கலவரத்தைக் கண்டு கொள்ளவில்லை" என்றார்.


ஆஷ் நினைவு.
பார்ப்பான் வாஞ்சிநாதனால் சுடப்பட்டு இறந்த தீண்டாமை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த கலைக்டர் ஆஷ் துரை நினைவு நாள்
(17/06/1911) இன்று 

• அயோத்திதாசப் பண்டிதரின் ஒரு பைசா தமிழன் இதழ் பாராட்டிய தீண்டாமை ஒழிப்பாளர் ஆஷ் துரை .
• சப் கலெக்டர் ஆஷ் நெல்லையில் இருந்த ஜாதி சமுக கொடுமைக்கு எதிரான முதல் அடியை வைத்தவர் தொட்டால் தீட்டு என்ற தீண்டாமையை தன்னால் எப்படி ஒழிக்க முடியும் என்று யோசித்தவர் அதற்கான ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார் 

• குறிப்பிட்ட மேல் சாதியினர் மட்டுமே குற்றால அருவியில்  குளிக்க முடியும் என்று கடுமையான தீண்டாமை நிலவிய போது ஆஷே மட்டுமே அங்கு அனைவரும் குளிக்க ஓர் சமத்துவத்தை கொண்டு வந்தார் 

• பட்டியல் இனத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை அக்ரஹாரம் வழியாக ஆஷ் துரையின் மனைவி தன்னுடைய சாரட்டு வண்டியில் கூட்டிச் சென்றார், இதற்குப் பிறகு தங்களுடைய இடத்தை அசுத்தப்படுத்தி விட்டதாக பார்ப்பனர்கள் கூக்குரல் இட்டனர், இது போன்ற தலித் விடுதலைச் செயல்களை சனாதன எதிர்ப்பாக பார்ப்பனர்கள் நிறுவ முயன்றனர்,

• கலெக்டர் ஆஷ் அவர்களைக் கொலை செய்வதற்கான காரணங் களை எழுதியுள்ள வாஞ்சி அய்யரின் கடிதத்தின் சில வரிகள். 

“அழியாத ஸனாதான தர்மத்தை” என, இதற்கு மேல் இங்கு ஆராய்ச்சி செய்வதற்கு ஒன்றுமில்லை இந்த வாஞ்சியின் கோபம் இந்தியாவை சுரண்டுகின்றார்கள் என்று வரவில்லை மாறாக தங்களின் ஆரிய ஆதிக்கத்தை அழிக்கின்றார்கள் என்று தான் வந்துள்ளது 

• இதை எல்லாம் தங்க முடியாமல் பார்ப்பனர் ஆதிக்கத்தை  மீண்டும் நிலைநாட்ட வாஞ்சிநாதன் ஐயர் அவரை சுட்டு கொன்று விட்டு ஓடி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டான் 
-------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?