சமஸ்கிருதத்தைத் திணிக்கும் தமிழக அரசு

 தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் அறிவிப்பு குறித்து மதுரை எம்.பி சு. வெங்கடேசன் :

“தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும். தமிழ்நாடு நிறுவனத்திற்கு இந்த அறிவிப்பு  வெளியிட்ட தீயசக்திகள் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இலங்கை யாழ்ப்பாணம் பகுதியையொட்டிய நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்தனர் என கூறி 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது.


சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ரூ1000 கோடி மதிப்புலான நிலத்தை அரசு கையகப்படுத்திய விவகாரத்தில் அதிமுக பிரமுகர் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கில், மனுதாரரின் கோரிக்கையை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது. அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை சட்டப்படியே அரசு கையகப்படுத்தியுள்ளது. 

விரைவில் அங்கு பூங்கா அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு வாதங்களை வைத்துள்ளது. இதனையடுத்து இம்மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியினர் விரைவில் கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த திட்டம். மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் வரும் சனிக்கிழமை மாலை சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்


பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் தரகர்களுக்கு அனுமதி இல்லை. மீறி அலுவலகத்திற்குள் நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் யாரும் பணத்தை கையில் கொண்டு வரவேண்டாம். போலி பத்திரப்பதிவுகள் தடுக்கப்பட்டுள்ளது என வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2016-21 ஆண்டு காலகட்டத்தில் ₹2.11 கோடி மோசடி செய்த புகாரில் 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு; முன்னாள் செயலாளர் உள்பட 2 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது


2021-ம் ஆண்டு செந்தில்குமார் என்பர் கொல்லப்படட வழக்கில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆட்கடத்தல் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புகார்கள் மீத நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளராக பதவியிறக்கம் செய்து டிஜிபி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


நடப்பாண்டு பொறியில் மாணவர்கள் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் படி பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வழங்க 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


பக்ரா கால்வாயில் தவறுதலாக விழுந்த பஞ்சாப் மாணவியை தன் உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றிய தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் நவநீத கிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தில் பீகார் தலைநகர் பாட்னாவுக்கு செல்கிறார்.


தமிழகத்தில் இன்று முதல் 500 மதுக்கடைகள் மூடப்பட உள்ளது. இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் அதிகபட்சமாக 138 கடைகள் மூடப்படுகிறது.

-------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?