பத்து வேடங்கள்!. பதினைந்துஆண்டுகள்

  இந்தி ,தெரியாத,பேசாத ஊழியர்களை அவமதித்ததற்காக, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மன்னிப்பு கேட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

• ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுபோன்ற விமர்சன போக்கை தொடர்ந்தால் கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்ய நேரிடும் என ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. குறுவை சாகுபடிகளை துவக்கிய விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

• கிரிப்டோ கரன்சியில் முதலீடு எனக்கூறி 100 கோடி ரூபாய் மோசடி . பணத்தை இழந்தவர்கள் கும்பகோணம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது, அது தொடர்பாக பதிவிட்ட மற்றும் அரசை விமர்சித்த ட்விட்டர் கணக்குகளை முடிக்க வேண்டும் என மோடி அரசு அழுத்தம் கொடுத்தது. இந்தியாவில் உள்ள டிவிட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என்றும், ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படும் என்றும் எங்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர் என்று டிவிட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சே குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ரகசிய ஆவணங்களை திருடிய வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது. தனி விமானம் மூலம் மியாமி நகருக்கு சென்றார்.

--------------------------------------------

பத்து வேடங்கள்!.

பதினைந்துஆண்டுகள்.!

10 வேடங்களில் கமல் நடித்து, பிரமாண்டமாக வெளியான திரைப்படம் தசாவதாரம். 2008ம் ஆண்டு அந்தப்படம் வெளியானது. 

15 ஆண்டுகளில் தற்போது வரை அந்தப்படம் மக்கள் மனதில் இடம் பிடித்த ஒரு படமாக உள்ளது.

 அந்தப்படம் வெளியான நாளில் அந்தப்படம் குறித்து தெரிந்துகொள்வோம்.

இந்தப்படத்தில் கமல் 10 வேடங்களில் நடித்திருப்பார். ரங்கராஜ நம்பி என்ற வைணவர், கோவிந்த் ராமசாமி என்ற உயிரித் தொழில்நுட்ப அறிவியலாளர், நாத்திகர், கிறிஸ்டியன் பிளெட்சர் - சிஐஏ அமைப்பின் முன்னாள் ஊழியர், கொலையாள், பல்ராம் நாயுடு - தெலுங்கு RAW அதிகாரி,கிருஷ்ணவேணி - சித்தம் பிறழ்ந்த பாட்டி, வின்சென்ட் பூவராகன் - தலித் தலைவர், சுற்றுச்சூழல் போராளி, அவதார் சிங் - பஞ்சாபி பங்கரா பாடகர் கலிஃபுல்லா கான் – இசுலாமியர், ஷிங்கென் நரஹஷி - ஜப்பானிய யயுற்சு தற்காப்புக் கலை வீரர், ஜார்ஜ் புஷ் - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் என்ற அனைத்து வேடங்களிலும் ஒவ்வொரு விதமாக கலக்கியிருப்பார்.

அமெரிக்க நிறுவனம் ஒன்றில் உயிரித் தொழில்நுட்ப அறிவியலாளர் கண்டுபிடித்த கிருமி ஒன்று தீய சக்திகளின் கைகளில் சிக்கிவிடும்.

அந்த கிருமியை கைப்பற்றி உலகில் அழிவை ஏற்படுத்த அவர்கள் திட்டமிடுவார்கள். அதை தடுக்க அறிவியலாளர் கமல் அதை துரத்தி வருவார். தீவிரவாதிகளும் அந்த கிருமியை கைப்பற்ற திட்டமிடுகிறார்கள். இதற்கிடையில் அறிவியலாளர் கமல் எப்படி அதை கண்டுபிடித்து, என்ன செய்தார் என்பது மீதி கதை.

அமெரிக்காவில் துவங்கிய கதை இந்தியாவில் முடியும். கிருமியில் தொடங்கிய கதை சுனாமியில் முடிவடையும். கதையின் கோர்வை மிக நன்றாக இருக்கும்.

12ம் நூற்றாண்டில் சோழ அரசன், கோவிந்தராஜர் சிலையுடன் ரங்கராஜ நம்பியைப் பிணைத்து நடுக்கடலுக்கு எடுத்துச்சென்று வீசும் காட்சிகள், இறுதியில் சுனாமி காட்சிகள் போன்ற சிறப்பு காட்சிகள் அமெரிக்க வல்லுனர் பிறையன் ஜென்னிங்க்ஸ் மேற்பார்வையில் சென்னை வரைகலை, நுட்பக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன. இந்தக்காட்சிகள் அந்தப்படம் வெளியான காலத்தில் பெருமளவில் பாராட்டு பெற்றன.

படபடவென பேசியே அசின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்கியிருப்பார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருப்பார். படத்தின் கதை கமல்ஹாசன், சுஜாதா, கிரேசி மோகன் ஆகியோர் சேர்ந்து எழுதியிருப்பார்கள். 

உலக நாயகனே பாடல் கமலை ப்ரமோட் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். 

கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது என்ற பாடல், 

ஓ…ஓ…சனம் கொண்டாட்டமான பாடல்,

 முகுந்தா, முகுந்தா, கிருஷ்ணா, முகுந்தா  நல்ல மெலடி பாடல், ஆகிய அனைத்து பாடல்களும் ஹிட்,இன்றளவும் ரசிக்கக்கூடிய ஹிட்டான பாடல்கள்.. படத்தின் இசை ஹிமேஷ் ரேஷாமியா அமைத்திருந்தார். 

" கடவுள் இல்லைன்னு சொல்லலை.

இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொன்னேன்"

அனைத்து வித்த்திலும் சிறப்பான தசாவதாரம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

வசூலையும் அள்ளிக் குவித்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

---------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?