உன்னால் முடியுமா?
கேள்வி :- பிராமணன் பூணூலை அறுக்கத் துணிந்த உங்களுக்கு ஒரு கிறித்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலைப் பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?
பெரியார் பதில் :- இசுலாம் மதத்தில் யார் ஒருவரும் வஜ்ராத் ஆகலாம்,
இமாம் ஆகலாம் கிறித்துவ மதத்தில் யார் ஒருவரும் பாதிரியார் ஆகலாம், ஏன் போப் ஆண்டவர் கூட ஆகலாம்.
ஆனால் இந்து மதத்தில் யார் வேண்டுமானாலும் சங்கராச்சாரி ஆக முடியுமா?
நீயும் இந்து, நானும் இந்து என்றால் எல்லோரும் சங்கராச்சாரி ஆக முடியுமா? பார்ப்பனர்கள் மட்டுமே ஆக முடியும். பார்ப்பனர்களிலும் அனைவரும் ஆகிவிட முடியாது. தெலுங்கு பேசும் ஸ்மார்த்த பார்ப்பனர் மட்டுமே ஆக முடியும்,
அனைத்து கிறித்துவரும் சிலுவை அணியலாம், அனைத்து இசுலாமியரும் தொப்பி அணியலாம், அனைத்து இந்துவும் பூணூல் அணிய முடியுமா?
அப்படியே அணிந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியுமா?
அர்ச்சகரஆக முடியுமா?
பார்ப்பன இனத்தில், பார்ப்பனச் சிறுவர்களுக்கு அவர்களது 8வது வயதில் ‘உபநயனம்’ என்ற சடங்கை நடத்தி பூணூல் அணிவித்த பிறகு பிராமணனாக ‘இரண்டாவது பிறவி’ எடுக்கிறார்கள். அப்படி ‘பிராமணனாக’ மாறியதன் அடையாளமாகத் தான் ‘பூணூல்’ அணிவிக்கப்படுகிறது.
தந்தை_பெரியார்