புயலே போ. போ. போ.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 6 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கின்றன.
ஒடிசாவின் பஹானகா பகுதியில் கோரமண்டல் ரயில் விபத்துக்கு உள்ளாகி 288 பேர் உயிரிழந்த கோர விபத்து நடைபெற்றது. 10 நாட்கள் ஆனதையொட்டி, உள்ளூர் மக்கள் மொட்டையடித்து சடங்குகள் செய்தனர். இறந்தவர்களுக்கு மரியாதை செய்யவும், காயம் அடைந்தவர்கள் குணமடையவும், அனைத்து மத பிரார்த்தனை நடத்தப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் உடலத்தை வைத்திருந்த பள்ளி அறைகள் இடிக்கப்பட்டு புணரமைக்கப்பட்டன.
பைபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக குஜராத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். குஜராத்தின் கட்சில் கண்டாலாவில் உள்ள தீனதயாள் துறைமுக அதிகாரிகள் மக்களை தற்காலிக குடியமர்த்தங்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.
காவிரிடெல்டா பாசனத்திற்காக இன்று மேட்டூரில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுதிறந்து வைக்கிறார்.
அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில், குறிப்பாக 12ம் தேதி அணை திறக்கப்படுவது 12வது முறையாகும். இதன்மூலம் நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே கனரக வாகன போக்குவரத்து 11 மணி நேரத்திற்கு பின்னர் துவங்கியது. அந்தியூர் - பர்கூர் மலைப்பாதையில் சேலத்திற்கு மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதால் கனரக வாகன போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தது
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 10 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. சுமார் 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ள இந்த கணக்கெடுப்பு பணி, 6 நாட்கள் நடக்க உள்ளது..
• சாலை வழியாக மேட்டூர் அணை திறக்க சேலம் சென்ற முதல்வர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரியார் சமத்துவபுரத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
• தமிழகத்தை புறக்கணித்ததே மத்திய பாஜன அரசின் 9 ஆண்டு கால சாதனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்தார்.
----------------------------------------------------
பொய் பேசும் அமித் சா
காமராசரையும், மூப்பனாரையும் பிரதமராக விடாமல் தடுத்தனர் என்பது உண்மைக்குப் புறம்பானது என சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவின் பேச்சு குறித்து கூறிய அவர், காமராசரை யாராவது தடுத்திருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
"தமிழர்கள் 2 பேர் பிரதமராவதை
1965-க்கு முன்பே பதவி வேண்டாம் என உதறியவர் காமராசர். பிரதமராக வேண்டும் என காமராசர் எப்போது விரும்பினார்?
காமராசர் விரும்பினால் யாராவது தடுத்திருக்க முடியுமா?
மேலும் அப்போது திமுக வளர்ந்து வரும் கட்சியாக இருந்தது. திமுக தலைவர் அண்ணா.
அதேபோன்று, பிரதமராக விரும்புகிறேன் என மூப்பனார் எப்போது கூறினார். அவரை பிரதமாராக்க யார் முயற்சி செய்தார்கள்.மூப்பனார் பிரதமராகக் கூடாது என யார் தடுத்தது?"
உண்மைக்குப் புறம்பாக அமித்ஷா பேசுகிறார்.வதந்திகளை,போட்டோஷாப்களை பரப்புவதே பா.ஜ.க கொள்கையாகிப்போய்விட்டது" என்றும் தெரிவித்தார்.
------------------------------------------------