ஊருக்கு உபதேசம்!

சிறந்த நிர்வாகத்திற்கு வெளிப்படைத் தன்மை அவசியம் என இருக்கையில், அதை தேசிய மருத்துவ கமிஷன் பின்பற்றாமல் இருப்பது சரியா?

"விதிமுறைகளை மேற்கோள் காட்டி தமிழகத்தின் 3 மருத்துவ கல்லூரிகளின் (சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட) அங்கீகாரத்தை ரத்து செய்த தேசிய மருத்துவ கமிஷனே விதிமுறைகளை மீறுவது மட்டும் எப்படி சரியாகும்? "என மருத்துவர் வீ.புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

"மருத்துவ கவுன்சில்-இந்தியா வெளிப்படை தன்மையுடன் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தான்,

அதற்கு பதிலாக,தேசிய மருத்துவ கமிஷன் உருவாக்கப்பட்டது. ஆனால் தேசிய மருத்துவ கமிஷனே 2019ம் ஆண்டில் வகுத்த தனது விதிகளை மீறுவது எப்படி சரியாகும்?

தமிழ்நாட்டில் விதிமுறை மீறல்களுக்காக, 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்த தேசிய மருத்துவ கமிஷன், 2019ல் தான் வகுத்த 6(6)NMC Actஐ மீறும் போது அதை யார் கேள்வி கேட்பது?

2019 NMC சட்டப்படி, அதன் தலைவர்,உறுப்பினர்கள் தேசிய மருத்துவ கமிஷனில் சேரும் போதும்,வெளியேரும் போதும் தனது சொத்துகளை வெளியிட்டு அது NMCன் வலைதளத்தில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

 இதை தேசிய மருத்துவ கமிஷன் கடைபிடிக்கவில்லை என்பதுடன், அவ்விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டும், அதற்கான தகவலை அளிக்காமல் இழுத்தடிப்பது தகவலை சட்டப்படி தர மறுப்பது எப்படி சரியாகும்?

எப்ரல் 6 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2019 NMC Act,பிரிவு 6(6)ன் கீழ் தலைவர்,உறுப்பினர்களில் எத்தனை பேர் தனது சொத்துகளை பணியில் சேரும் போதும் விலகும் போதும் சட்டப்படி தாக்கல் செய்துள்ளனர் என்ற கேள்விக்கு பதில் இல்லாததால் மே 7 அன்று மேல்முறையீடு செய்யப்பட்டும் அதற்கும் எந்த பதிலும் தேசிய மருத்துவ கமிஷன் அளிக்கவில்லை.!

தேசிய மருத்துவ கமிஷனின் தலைவர்,உறுப்பினர்கள் சேரும் போதும்,பணியிலிருந்து விலகும் போது தனது சொத்து கணக்கை NMC லைதளத்தில் வெளியிட வேண்டும் என விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளன. இவர்கள் தமிழகத்தின் 3 மருத்துவ கல்லுரிகளின் அங்கீகாரத்தை விதிமுறை மீறல்களுக்கு மட்டும் ரத்து செய்யலாமா?

அதுவும் காமிரா இல்லை,பயோ வருகைப்பதிவேடு இல்லை என்ற மாபெரும் குற்றங்களுக்காக.ஆனால் மதுரை எய்ம்ஸ் கட்டிடமே இல்லாமல் இயங்குகிறது.

இதனால் விதிமுறை மீறல் என வரும்போது "ஊருக்கு உபதேசமா"-தனக்கு பொருந்தாதா?இவர கள் நோக்கம் மருத்துவக் கல்வித்துறையில் வளர்ந்த தமிழ்நாட்டை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான்!.

மேலும் சிறந்த நிர்வாகத்திற்கு வெளிப்படைத் தன்மை அவசியம் என இருக்கையில், அதை தேசிய மருத்துவ கமிஷன் பின்பற்றாமல் இருப்பது சரியா? "பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே" எனும் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

---------------------------------------------------

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறை காரணாமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு மாதத்திற்குப் பின் இன்று விசாரணை நடைபெற உள்ளது.


குறுவை சாகுபடி- இன்று ஆலோசனைக் கூட்டம்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட‌ உள்ளது. இந்நிலையில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், பயிர்க்கடன் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழை

அரபிக் கடலில் உருவாகி உள்ள பைபர்ஜாய் புயல் தீவிரமடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பைபர்ஜாய் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களை பார்வையிட வரும் முதலமைச்சர்

டெல்டா மாவட்டங்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பங்கேற்கிறார்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகிறார்!

உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான அமித்ஷா வரும் இன்று தமிழ்நாடு வருகிறார். வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

-----------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?